Friday, September 30, 2016

நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்...


நல்ல  தலைவனின் முதல் அடையாளம் தன்னை தான் நன்றாக அறிந்து கொள்வது.

எப்பொழுது தனது கட்டுப்பாடு நிலை குலைகிறது என்று தெரிய வேண்டும். ஏன் அப்படிக் கட்டுப்பாடு குலைந்து,  தாபம்  தன்னை ஆட்டி வைக்கிறது, வெறுப்பு தன்னைச் சுழற்றி அலைக்கழிக்கிறது, சுயப்பரிதாபம் பொங்கி வருகிறது, தன் குரல்  நிதானமில்லாமல் உயர்கிறது, இதை அறிந்து கொண்டால் வாழ்க்கை சுலபம். இதற்கான உரம் குழந்தைப் பருவத்திலேயே இடப்படுகிறது.

சின்னக் குழந்தைகள் கத்திப் பேசி, அழுதுஅடம் பிடித்து, பிடிவாதமாக இருக்கும் போது அவர்களும் மகிழ்ச்சியாகவோ அல்லது சக்தி உடையவர்களாகவோ உணர்வதில்லை. எப்படி குழந்தைகளிடம் கத்தி, காய் ஓங்கிய பின் பெரியவர்கள் தன்னைப் பற்றி சிறியவர்களாக உணர்கிறார்களோ, அது போல, குழந்தைகளுக்கும் அப்படி நடந்து கொண்ட பின்னர் தன மீது உள்ள நம்பிக்கையும் மதிப்பும் குறைகிறது. தனது மனதில் உள்ளதை எடுத்துச் சொல்லி மற்றவர்களை புரிய வைக்க முடியவில்லையே என்கிற கையாலாகாத உணர்வு தான் நீடிக்கிறது.

பெரியவர்களிடம் மரியாதை இல்லாதது போன்ற, மிரட்டி கண்ணை உருட்டும் நடத்தை பெற்றோர்களின் தப்பான பேச்சாலோ, நடத்தையாலோ உருவாகுவதில்லைதன் குழந்தையிடம் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புக்களை சுமத்துவதாலோ, குழந்தையின் உணர்வுகளை புரிந்து கொள்ளாததாலோ அல்லது மதிப்புக் கொடுக்காததாலோ வருவதில்லை; குழந்தையின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்காததாலோ, தனது நேரம் அல்லது பணம் சரியாக கொடுக்காததாலோ ஏற்படுவதில்லை; இது ஒரு மனக் கோளாறும் அல்ல, சுயமரியாதை இல்லாததினால்  வருவதுமில்லை.

பின் இது எங்கிருந்து உருவாகிறது

 பிறரது பேச்சிற்கும், நடத்தக்கும் தவறான காரணங்களை கற்பனை செய்து கொண்டு அவற்றையே உண்மை என்று நினைப்பது,  சிக்கல் தீர்க்கும்  திறமைக் குறைவு, தங்களை சக்தி இல்லதவர்களாக நினைத்துக் கொள்வது, மற்றவர்களை அடக்கி வைக்க வேண்டும் என்கிற மனப்பான்மை, எந்த ஒரு எதிர்பார்ப்பும் பூர்த்தி அடையா விட்டால் வரும் விரக்தியை தாங்கிக் கொள்ளும் சக்திக் குறைவு, புத்தி பூர்வமான காரியங்களையோ அல்லது உடல் உழைப்பிற்கு அவசியமான காரியங்களையோ செய்வதற்கு சோம்பல், மிகவுமே கூடிய தன்னலம், கடைசியாக, அவர்களது பயங்களும், பாதுகாப்பில்லாத உண்ர்வும் – இவைகள் தான் அப்படித் தன் கட்டுப்பாட்டை
இழந்து குழந்தைகள் நடந்து கொள்வதற்குக் காரணங்கள்.